வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாக மாற்ற வேண்டும்- நாடாளுமன்ற தேர்தல் குழுவிடம் மனு

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை டிரான்ஷிப்மென்ட் துறைமுகமாக மாற்ற வேண்டும்- நாடாளுமன்ற தேர்தல் குழுவிடம் மனு

தூத்துக்குடி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக் குழுவின் தலைவர் கனிமொழி கருணாநிதியிடம் தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக சங்கத்தின் சார்பில் தலைவர் தமிழரசு மற்றும் முன்னாள் தலைவர் ஜோ.பிரகாஷ் ஆகியோர் தேர்தல் அறிக்கையை சேர்த்து நிறைவேற்ற கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியுள்ளதாவது,

தென்னிந்தியாவிற்கான ஏர்கார்கோ ஹப் மற்றும் சர்வதேச விமான நிலையம் ஏற்;படுத்துதல்
மேம்படுத்துதல்,
கிழக்கு கடற்கரை சாலையில் நான்கு வழிச்சாலை ஏற்படுத்துதல், சென்னை – தூத்துக்குடி – கன்னியாகுமரி வரை வழிச்சாலை ஏற்படுத்துதல்,
வடக்கு -தெற்கு ரயில்வே சரக்கு வழித்தடத்தை டெல்லியில் தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

மீளவிட்டானில் இருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரை ரயில்வே இருப்புப் பாதைக்கு இணையாக சாலை வசதி ஏற்படுத்துதல், 150 MLD உப்பு நீரை நன்னீராக்கும் ஆலை ஏற்படுத்துதல்,
தூத்துக்குடியில் வர்த்தக மையம் ஏற்படுத்துதல்
தூத்துக்குடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைத்தல்
ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் சென்னையில்
ஐஐடி, ஐஐஎம், மற்றும் ஜிப்மர் ஆகியவை அமைக்க பரிந்துரைக்கப்பட வேண்டும்.

தூத்துக்குடியில் திறன் மேம்பாட்டு மையம் ஏற்படுத்துதல். தூத்துக்குடி துறைமுகம் மற்றும் பல்வேறு தொழிற்சாலைகளை கருத்தில் கொண்டு, தூத்துக்குடியில் நவீன டிரக் டெர்மினல் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடியை சுற்றுலாத்தளமாக அறிவித்து கடற்கரை பகுதியில் மீன்வளம் மற்றும் நீர்வீழ்ச்சிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கோயம்புத்தூருக்கு அடுத்த படியாக லாஜிஸ்டிக்ஸ்க்கான முக்கிய மையமாக தூத்துக்குடி உருவாக வாய்ப்புள்ளது. உள்கட்டமைப்பை எளிதாக்குவதற்கும் தடையற்ற மல்டி மாடல் சரக்கு மரிமாற்றத்தை;

மொழி பெயர்க்கும் திறன் பகுப்பாய்வு தரவு போன்ற பலவிதமான விஷயங்களை முன்கூட்டியே கணினிகள் செய்ய தூத்துக்குடியில் செயற்கை நுண்ணறிவு பூங்கா அமைத்தல்.

தூத்துக்கடியில் ஃபின்-டெக் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைத்தல்,

தூத்துக்குடியில் மருத்துவ தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைத்தல், தூத்துக்குடியில் விவசாயம் மற்றும் உயிர் தொழிநுட்ப பூங்கா அமைத்தல்,

தூத்துக்குடி மாவட்டத்தில் இனி வருங்கால பெரு வெள்ளம் ஏற்படாதவாறு நன்கு திட்டமிடப்பட்டு நிரந்தர தீர்வு காண, தூத்துக்குடி சிப்காட் இண்டஸ்ட்ரீஸ் வளாகத்தில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு சிப்காட் வரி விதிப்பதுடன் தூத்துக்குடி மாநகராட்சியும் வரிவிதிப்பு, இரட்டை வரி விதிப்பை ரத்து செய்து சிப்காட் வரிவிதிப்பு மட்டுமே செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )