இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேஷியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தோனேஷியாவின் தென்கிழக்கே சுலேவாசிய தீவில் உள்ள பாலி தீவு பகுதியில் கடலுக்கு அடியில் 160 கி.மீ. ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.9 ஆக பதிவானது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பாதிப்பு மற்றும் உயிர் சேதம் குறித்து தகவல்கள் தெரியவில்லை.