இந்தோ – சீனா போரால் நிலங்களை பறிகொடுத்தவர்களுக்கு ரூ. 3000 கோடி இழப்பீடு
இந்தோ – சீன போரால் தங்களது நிலங்களை பறி கொடுத்த அருணாச்சல் பிரதேசவாசிகளுக்கு 55 ஆண்டுகளுக்கு பின்னர் இழப்பீடு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 1962-ம் ஆண்டு இந்தியாவிற்கு-சீனாவிற்கும் இடையே எல்லையில் போர் நடந்தது இதில் அருணாச்ச்ல பிரதேச மாநிலத்தில் தவாங், மேற்குகெமங்க், சுபன்ஸ்ரீதிபாங்க், மேற்கு சயைாங்க உள்ளிட்ட மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராணுவம் கையகப்படுத்தியது. ஒரு மாதம் நடந்த இந்த போரில் இந்தியா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை குவித்து வைத்தது.
இப்போரால் இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை நிலங்களை பறிகொடுத்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவது குறித்து அருணாச்சல் பிரதேச முதல்வர் பெமா காண்டு, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரன் ரிஜிஜூ, ராணுவ இணை அமைச்சர் சுபாஷ் பஹாமரே ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து கிரன் ரிஜிஜூ செய்தியாளர்களுக்கு கூறியது, தேசத்திற்காக தங்களை நிலங்களை அளித்தவர்களுக்கு ரூ. 3000 கோடி அளவிற்கு உரிய இழப்பீடு வழங்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் 55 ஆண்டு கால எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. மேலும் நிலம் தொடர்பாக நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறுவது குறி்த்து உயர்மட்ட குழு அமைத்து ஆராய்ந்து அறிக்கை தரும். பின்னர் பறிகொடுத்த நிலங்களுக்கு நியாயமான முறையில் இழப்பீட்டு தொகை வழங்கப்படும் என்றார்.