வ.உ.சி துறைமுக ஆணையத்தில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய 14 கார்களை (e-Cars) துறைமுக பயன்பாட்டிற்கு அறிமுகம்

வ.உ.சி துறைமுக ஆணையத்தில் மின்சாரத்தால் இயங்கக்கூடிய 14 கார்களை (e-Cars) துறைமுக பயன்பாட்டிற்கு அறிமுகம்

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைத்தில் 05.02.2024 இன்று வி. சுரேஷ் பாபு, தலைமை இயந்திர பொறியாளர், கே. ரவிக்குமார், தலைமை பொறியாளர், ஆர். பிரபாகர், போக்குவரத்து மேலாளர், கேப்டன் பிரவீன் குமார் சிங், துணை பாதுகாவலர் மற்றும் அசோக குமார் ஷாகு, நிதி ஆலோசகர் மற்றும் தலைமை கணக்கு அதிகாரி அவர்கள் இணைந்து மின்சாரத்தால் இயங்க கூடிய 14 கார்களை (e-Cars) கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைமானது கொல்கத்தாவிலுள்ள ACC Logistics என்ற நிறுவனத்தின் மூலம் (இந்திய அரசு விற்பனை இணையதளம் GeM வழியாக) மகேந்திரா SUV 400 வகை 14 மின்சாரத்தால் இயங்க கூடிய கார்களை (e-Cars) 5 வருட குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளது.

மேலும் குத்தகை ஒப்பந்தத்தின்படி இந்த நிறுவனத்தார் மின்சாரத்தால் இயங்க கூடிய கார்களை (e- Cars) வழங்குதல், ஓட்டுநர்களை நியமித்தல் மற்றும் வாகனங்களின் பராமரிப்பு போன்றவற்றை மேற்கொள்ளும்,

இந்த 14 மின்சார வாகனமும் ஆண்டிற்கு கிரீன்ஹவுஸ் வாயு (Greenhouse Gas) வழிதடத்தில் 14 டன் கார்பன் வெளியேற்றத்தை குறைக்கும். மின்சாரத்தால் இயங்க கூடிய கார்களுக்கு துறைமுகத்தில் அமையபெற்றுள்ள சூரியமின் ஆலை மற்றும் காற்றாலை மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு மின்வூட்டப்படும்.

உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தரத்தினை மேம்படுத்தும் முயற்சியாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், ‘கடற்சார் அமிர்கல் தொலைநோக்கு 2047’ (Maritime Amrit Kaal Vision -2047) திட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய துறைமுகங்களை கார்பன் வெளியேற்றம் இல்லாத துறைமுகங்களாக மாற்றுவதற்கும், துறைமுகங்களில் கிரீன்ஹவுஸ் வாயுகளை (Greenhouse Gas) குறைப்பதற்கும் உறுதி எடுத்துள்ளது. அதன்படி துறைமுகங்களில் பசுமை எரிபொருள் பயன்படுத்துதல், மின்மயமாக்கப்பட்ட / புதுப்பிக்கப்பட்ட விசக்தியை சரக்கு கையாளும் இயந்திரங்களில் பயன்படுத்துதல், மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், கப்பல்களுக்கு தளத்திலிருந்து மின்சாரம் வழங்குதல் இது போன்ற திட்டங்கள் அமைபெற்றுள்ளன.

இதன்படி வ.உசிதம்பரனார் துறைமுக ஆணையத்தில் 5 மெகாவாட் சூரியமின் நிலையம், 2 மெகாவாட் காற்றாலை, 640 கிலோவாட் மேற்கூரை மின் நிலையம், மின்சாரத்தால் இயங்க கூடிய கார்கள் (e-Cars), 100 சதவிகிதம் LED ஒளிவிளக்குகள். கப்பல் சரக்கு தளங்களில் கப்பல் மற்றும் இழுவை கப்பலுக்கு தேவையான மின்சாரத்தை வழங்குதல் மற்றும் மின்சாரத்தால் இயங்க கூடிய கார்களுக்கு தேவையான மின்வூட்டி நிலையங்களை அமைத்தல் போன்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது.

மேலும் வருங்காலங்களில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையமானது மின்சாரத்தால் இயங்க கூடிய பேருந்துகள் (e-Buses), அனைத்து கப்பல் சரக்கு தளங்கள் மற்றும் சரக்குபெட்டக முனையங்களின் கப்பல்களுக்கு தேவையான மின்சாரத்தை தளத்திலிருந்து வழங்குதல், நகரும் பளுதூக்கிகள், Quay வகை பளுதூக்கிகள் (Rail Mounted Quay Cranes). ரப்பர் டயர் பளுத்தூக்கிகள் போன்ற அனைத்து படிம எரி பொருள் மூலம் இயங்க கூடிய இயந்திரங்களையும் மின்னாற்றல் / புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி மூலம் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது என வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )