பள்ளி மாணவிகளிடம் ஆபாச படங்கள் காண்பித்து சில்மிஷம் – தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

பள்ளி மாணவிகளிடம் ஆபாச படங்கள் காண்பித்து சில்மிஷம் – தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே இயங்கி வரும் தொடக்கப்பள்ளி ஒன்றில் தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் (58) என்பவர் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இவர் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகளிடம் சில்மிஷம் செய்தும், செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவிகள் சம்பவம் குறித்து தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்கள் சம்பவம் தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் போலீசார், பள்ளிக்கூடத்திற்கு சென்று விசாரணை நடத்தியபோது, ஆசிரியர் ஜான்சன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ஜான்சனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று கைது செய்து, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி ஜெயிலில் அடைத்தனர்.

பள்ளி மாணவிகளிடம் தலைமையாசிரியர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் சக மாணவிகள் மற்றும் பெற்றோரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )