பயிற்சியாளர் நியமனத்தில் தலையீடு இல்லை: பிசிசிஐ நிர்வாகக்குழு தகவல்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நியமனத்தில் பிசிசிஐ நிர்வாக குழு ஒருபோதும் தலையிடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கு பின் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே வின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து மீண்டும் இப்பதவிக்காக கும்ப்ளே விண்ணப்பித்துள்ளார். மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவக், டாம் மோடி உள்ளிட்டோரும் இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர்.
அனில் கும்ப்ளேவை மாற்றக் கூடாது என சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமண் ஆகியோரை உள்ளடக்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி தெரிவித்து வருகிறது. பிசிசிஐ நிர்வாக குழுவும் இந்த முடிவை வரவேற்று இருப்பதாக கூறப்படு கிறது.
இந்தச் சூழலில் புதிய பயிற்சி யாளரை தேர்வு செய்வதற்காக கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி யின் கூட்டம் நேற்று முன்தினம் லண்டனில் கூடியது. சுமார் 2 மணி நேரம் இந்த கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தின் முடிவில், புதிய பயிற்சியாளர் யார் என்பதை முடிவு செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கும்படி பிசிசிஐயிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதை காரணமாக காட்டியுள்ள பிசிசிஐயின் பொறுப்பு தலைவர் சி.கே.கண்ணா, புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை பிசிசிஐயின் சிறப்பு பொதுக்கூட்டம் நடைபெ உள்ள 26-ம் தேதி வரை நிறுத்தி வைக்கக் கோரி பொறுப்பு செயலாளர் அமிதாப் சவுத்ரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதற்கிடையே கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியின் முடிவில், பிசிசிஐ நிர்வாக குழு தலையிடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாக குழு வட்டாரங்கள் இதனை மறுத்துள்ளன. ‘‘கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி கும்ப்ளே தான் மீண்டும் பயிற்சி யாளராக வர வேண்டும் என விரும்புகிறது. அவ்வாறு இருக்கும்போது, இந்த விவகாரத் தில் ஏன் கூடுதல் அவகாசம் கேட்டது என்று தெரியவில்லை.
தவிர சாம்பியன்ஸ் டிராபி முடிவதற்கு முன்பாகவே புதிய பயிற்சியாளர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அவசியமும் பிசிசிஐக்கு இல்லை. ஆஸ்தி ரேலிய தொடருக்குப் பின் இந்த நடவடிக்கையை தொடங்கி இருக்கலாம். அதே சமயம் பயிற்சி யாளர் நியமன விவகாரத்தில் நிர்வாக கமிட்டி ஒருபோதும் தலை யிடாது” என அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.