
தூத்துக்குடியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கல்வி மற்றும் வட்டி இல்லாத கடன் மகளிர் உதவும் சங்கம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
தூத்துக்குடியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பாக கல்வி மற்றும் வட்டி இல்லாத கடன் மகளிர் சங்கம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
.
தூத்துக்குடி தெற்கு புது தெருவில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் இன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி இஸ்லாமிய கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சம்சுதீன் தலைமையில், ஜனாப் ஷாஜகான் ஜனாப் பிதர் பிஸ்மி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக தமிழக ஜமாத் பைத்துல் மால்கள் ஒருங்கிணைப்பாளர் ஹிதாயத்துல்லாஹ் கலந்து கொண்டு விழிப்புணர்வு கருத்துக்கள் வழங்கினர்.
அவர் பேசும்போது, இந்தியாவில் அனைத்து சமுதாயமும் முன்னேறினால் தான் இந்தியா முன்னேறும் ஒவ்வொரு சமூகமும் முன்னேற வேண்டும். மகாத்மா காந்தி கனவு அப்போதுதான் நிறைவேறும் சமுதாயத்திலே கல்வி பொருளாதாரத்தில் சமுதாயத்தில் கல்வி பொருளாதாரத்தில் உயர வேண்டும் என்ற அடிப்படையிலேயே, எல்லா சமூகங்களுக்கும் கொடுக்கக்கூடிய வட்டி இல்லாமல் ஒவ்வொரு பள்ளிவாசல்களும் கடன் வாங்க வேண்டும் என்ற அடிப்படையில், தான் வட்டி இல்லாமல் கடன் கொடுக்கக்கூடிய அமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டிலே 2,500 ஊர்களிலே இந்த அமைப்பு இருக்கின்றது என்றார். முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி முஸ்லிம்களுக்கு ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு தருவதாக உறுதி அளித்தார். அதன்பிறகு அவர்கள் ஆட்சிக்கு வரவில்லை இப்பொழுது இருக்கின்றோம் தமிழக அரசு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு பெறுவதற்கு முன் வர வேண்டும் என்றார்.
இந்நிகழ்வில் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் உடனிருந்தார். ஜனாப் இப்ராஹிம் நன்றி உரையாற்றினார்.