காஷ்மீர் விவகாரம் என்ற பஸ்சில் பயணியாக பாகிஸ்தான் : ஓமர் அப்துல்லா
காஷ்மீர் விவகாரம், இந்திய – பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே நீண்ட நெடுங்காலமாக தீர்க்கப்படாத பிரசனையாக உள்ளது. இவ்விவகாரத்தில் சுமூக தீர்வு ஏற்படுத்தும் பொருட்டு, இந்தியா பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது, ஆனால் தீர்வுதான் கிடைத்தபாடில்லை
இந்நிலையில், காஷ்மீர் விவகாரம், டிரைவர் இல்லாத பஸ் என்றும்,இதில் பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாத இயக்கமான ஹூரியத்தும் பயணிகளாக உள்ளதாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா கூறியுள்ளது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.