மீண்டும் பிரச்னை கிளப்புவோம்! ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
எம்.எல்.ஏ.,க்கள் பேரம் தொடர்பான விவகாரத்தை, இன்றும் சட்டசபையில் எழுப்பப் போவதாக, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
அவர் நேற்று கூறியதாவது:
குதிரை பேரம் அடிப்படையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில், வெற்றி பெற்றுள்ளனர் என்பது, இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் வாக்குமூலம் தெளிவு படுத்துகிறது. எனவே, இந்த ஆட்சி கலைக்கப் பட வேண்டும். ஆட்சியாளர்கள், ராஜி னாமா
செய்ய வேண்டும். ஏற்கனவே நடந்த ஓட்டெடுப்பை, சபாநாயகர் ரத்து செய்ய வேண்டும்.
இதில் யாரெல்லாம் சம்பந்தப்பட்டுள்ளனர்; யாருக் கெல்லாம் பணம் வழங்கப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிய, உடனடியாக, சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும் என, சட்ட சபை யில் பேச முயற்சித்தோம்;ஆனால்,பேச அனுமதிக்கவில்லை. கடைசி வரை போராடி னோம்;பேச அனுமதிக்கா மல், சபாநாயகர், எங்களை வெளியேற்றினார்.
காவிரி, முல்லை பெரியாறு, ‘நீட்’ தேர்வு பிரச்னை கள், நீதிமன்றத்தில் இருந்தபோது சட்டசபையில்
பேசப்பட்டன. நீட் தேர்வு விவகாரம், நீதிமன்றத் தில் இருந்தபோது தான், அவசர சட்டம் கொண்டு வரபட்டது. தற்போது மட்டும், ஏன் பேசக் கூடாது? நாளை சட்ட சபைக்கு செல் வோம். மீண்டும், இந்த பிரச்னையை எழுப்பி, அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என கோருவோம். இவ்வாறு அவர் கூறினார்.