
சப்-இன்ஸ்பெக்டர் மனைவிக்கே இந்த நிலையா.?. அதிர்ச்சியில் திருச்செந்தூர் காவல்துறை
திருச்செந்தூர் அருகே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செந்தூர் அருகேயுள்ள சண்முகபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் தாமஸ். இவர் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாத்திமா மேரி (43) என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர்.
குழந்தைகள் குமாரபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வருவதற்காக பாத்திமா மேரி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். ஆனால் குழந்தைகளை தாமஸ் தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றுவிட்டாராம். இதையறிந்த பாத்திமாமேரி மோட்டார் சைக்கிளில் சண்முகபுரத்திற்கு தனியாக திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள மாட்டு பண்ணை அருகே சென்றபோது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் பாத்திமா மேரியை வழிமறித்து, அவர் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கத்தாலியை அறுத்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பாத்திமாமேரி திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்கு பதிவு செய்து, தாலிச்செயினை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனைவியின் கழுத்தில் கிடந்த தாலிச் செயினை மர்ம நபர்கள் வழிமறித்து பறித்துச் சென்ற சம்பவம் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: திருச்செந்தூர் சதீஷ்