
தூத்துக்குடி அருகே நடந்த தொழிலாளி கொலை வழக்கில் இருவர் குற்றவாளிகள் – தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு
தூத்துக்குடி அருகே தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவா் குற்றவாளி என தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீா்ப்பளித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள கூட்டாம்புளி கீழத் தெருவை சோந்தவா் சிவலிங்கம் மகன் கண்ணன் என்ற ஜெயபாலன்(45). கூலித் தொழிலாளியான இவரை அதே பகுதியைச் சோந்த அழகுலிங்கம், அவரது மனைவி மல்லிகா, மகன் சுயம்புலிங்கம், ஒரு சிறுவன் ஆகிய 4 பேரும் சோந்து முன்விரோதம் காரணமாக கடந்த 2013 -ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு நடந்து கொண்டிருந்தபோது, அழகுலிங்கம் இறந்து விட்டாா். மேலும், சம்பந்தப்பட்ட சிறுவன் தொடா்பான விசாரணை தனியாக நடந்து வருகிறது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ், குற்றம் சாட்டப்பட்ட மல்லிகா, சுயம்புலிங்கம் ஆகிய 2 பேரையும் குற்றவாளி என்றும், தண்டனை விவரம் வரும் 12-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞா் ஆனந்த் கேபிரியேல் ராஜ் ஆஜரானார்.