இந்தி இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை வெங்கய்யா நாயுடு சொல்கிறார்
மத்திய மந்திரி வெங்கய்யா நாயுடு கூறியதாவது:-
இந்தி தான் தாய்மொழி. நமது தாய்மொழியை கற்றுக் கொள்வதுடன் அதனை மேம்படுத்தவும் வேண்டும். இந்தி மொழி இந்தியர்களின் அடையாளம். இதற்காக நாம் பெருமைப்படவேண்டும். நாம் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ளும்போது, நம்மை ஆங்கிலேய மக்கள் போல நினைத்துக் கொள்கிறோம். இது நாட்டின் நலனுக்கு நல்லது அல்ல. இந்தி நமது தேசிய மொழி. அது இல்லாமல் நாட்டின் வளர்ச்சி சாத்தியமே இல்லை.
வேலைவாய்ப்புக்காக ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்றுக் கொள்ளவேண்டும் என எண்ணுவது துரதிர்ஷ்டவசமானது. அதே நேரம் இந்தியை கற்றுக் கொள்ளவேண்டும். இதுபற்றி தேசிய அளவில் விவாதம் வேண்டும் என நான் விரும்புகிறேன் இவ்வாறு அவர் கூறினார்.