Breaking News
‛பயங்கரவாதத்தை வேரறுப்போம்’: டிரம்ப்-மோடி சபதம்

பயங்கரவாதத்தை வேரறுக்க இந்தியா- அமெரிக்கா அரசு இணைந்து பாடுபடும்’ என டிரம்ப்-மோடி இருவரும் தெரிவித்துள்ளனர்.இந்தியா- அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை வெள்ளை மாளிகையில் உள்ள அமைச்சரவை கூட்ட அரங்கில் நடந்தது. இதனையடுத்து செய்தியாளர்கள் மத்தியில், பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் பேட்டியளித்தனர்.

இரக்கம் இல்லை:

டிரம்ப் பேசியதாவது:இந்தியா அமெரிக்காவின் உண்மையான நண்பன். இருநாடுகளுக்கிடையேயான உறவு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வலுவாக உள்ளது. இஸ்லாமிய பயங்கரவாதத்தை ஒழிக்க இந்தியா – அமெரிக்கா இணைந்து செயல்படும். பயங்கரவாதத்தின் மீது இருநாடுகளுக்கும் இரக்கம் கிடையாது. ஊழலுக்கு எதிரான மிகப்பெரிய பார்வை கொண்டவர் மோடி. இந்தியாவிற்கு அதிக எரிவாயு ஏற்றுமதி செய்ய எதிர்பார்க்கிறோம். அடுத்த இரண்டு வாரத்தில் இந்தியாவில் இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வரிமாற்றங்கள் நடைமுறைக்கு வரவுள்ளது. ஜி.எஸ்.டி., போன்ற வரிக்கொள்கையை அமெரிக்காவும் பின்பற்றும். இந்தியா- அமெரிக்க உலக தொழில் முயற்சி தூதுகுழுவை வழி நடத்த என் மகள் இவான்காவிற்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் அழைப்பை இவான்கா ஏற்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதத்தை ஒழிப்போம்:
தொடர்ந்து மோடி பேசியதாவது:

டிரம்ப்பையும், அவரது குடும்பத்தையும் இந்தியாவுக்கு வரவேற்கிறேன். பயங்கரவாதத்தை வேரறுப்பதே எங்களது பேச்சுவார்த்தையின் முக்கிய சாராம்சம். பயங்கரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் முன்னுரிமை வழங்குகிறோம். இருநாடுகளும் இணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்கும். இந்தியாவின் முன்னணி திட்டங்களில் அமெரிக்காவிற்கு முக்கிய இடம் ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.