200 ரூபாய் நோட்டு அச்சிடும் பணி தொடக்கம்
மக்களிடையே பணப் பரிவர்த் தனையை எளிதாக்கும் வகையில் ரூ.200 நோட்டும் அச்சிடும் பணியை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன் ஆர்பிஐ உத்தரவின் பேரில், மத்தியப் பிரதேசம்- ஹோஷங்கா பாத்தில் உள்ள அரசு அச்சகத்தில் இப்பணி தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த அச்சகத்தில் இந்த நோட்டு தற்போது பல்வேறு கட்ட பாதுகாப்பு மற்றும் தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. புதிய ரூ.200 நோட்டு நவீன பாதுகாப்பு அம்சங்களை கொண்டதாக இருக்கும். கள்ள நோட்டு புழக்கத் துக்கு வருவதை தடுக்கும் வகை யில், முன்னெச்சரிக்கை நட வடிக்கையில் அதிகாரிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.