திருச்செந்தூர் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடி பட்ட வீதி உலா நடைபெற்றது

திருச்செந்தூர் மாசித் திருவிழாவை முன்னிட்டு கொடி பட்ட வீதி உலா நடைபெற்றது

தி ருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் நாளை (பிப்.14) தொடங்குகிறது. இதனை முன்னிட்டு இன்று மாலை கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.

முருகபெருமானில் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய விழாக்களில் மாசித் திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டுக்கான மாசித் திருவிழா நாளை (பிப்.14) தொடங்குகிறது.

இதனை முன்னிட்டு கொடிபட்டம் வீதி உலா இன்று மாலை நடைபெற்றது. 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை 12ம் திருவிழா மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டத்தை 3-ம் படி செப்பு ஸ்தலத்தார் குளத்துமணி அய்யர், யானை மீது அமர்ந்து கையில் ஏந்தியவாறு வீதி உலா வந்து கோயில் சேர்ந்தது.

14 ஊர் செங்குந்தர் சமுதாய உறவின்முறை நாட்டுத் தலைவர் நடராஜன், அவிருத்தி சங்கத் தலைவர் பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் பொருளாளர் மாரிமுத்து, திரிசுதந்திரர்கள் கோயில் பணியாளர்கள், 14 ஊர் செங்குந்தர் முதலியார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி : திருச்செந்தூர் சதீஷ் 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )