வடகொரியா ஏவுகணை சோதனை : இன்று ஐ.நா. அவரச கூட்டம்
பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் வடகொரியா நேற்று, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணையை சோதனை செய்தது. வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கி.மீ பாய்ந்து சென்று இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரிய பரிசோதனை செய்துள்ளதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.கடந்த வாரம் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் உடன் தென்கொரிய அதிபர் மூன் ஜே இன், வடகொரியா விவகாரம் தொடர்பான முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், இந்த ஏவுகணை சோதனை நடைபெற்றுள்ளது அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. வடகொரியாவின் இத்தகைய செயலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், ஐ.நா. பொதுக்குழுவை அவசரமாக கூட்டவும் அமெரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், ஐ.நா. அவசரக் கூட்டம் இன்று நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.