Breaking News
ஜல்லிக்கட்டு: ‘பீட்டா’ தலைவி கமலுக்கு பதில்

ஜல்லிக்கட்டு விவகாரத்தில், பீட்டா அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி, பூர்வா ஜோஷிபுரா நடிகர் கமலுக்கு பதிலளித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது: இங்கு, ஜல்லிக்கட்டுக்கு தடை கோருவதை விடுத்து, அமெரிக்காவில் காளைகள் மீது அமர்ந்து நடைபெறும், ‘புல் ரைடிங்’ போன்ற விளையாட்டுகளை தடை செய்ய, பீட்டா முயற்சிக்க வேண்டும் என, கமல் கூறியுள்ளார்.

‘பீட்டா இந்தியா’ என்பது, இந்தியாவை மையமாக கொண்ட அமைப்பு. இந்திய விலங்குகள் வதைபடுவதை தடுப்பதே, இதன் குறிக்கோள். ‘பீட்டா யு.எஸ்.,’ அமைப்பு, அதற்காக, அமெரிக்காவில் போராடி வருகிறது. கமல் கூறிய விளையாட்டு, அங்கு பல மாநிலங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.