Breaking News
காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தெரிகிறது.

சென்னையில் இன்று காலை 10 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ஓ.பன்னீர் செல்வத்தின் பேட்டியைத் தொடர்ந்து அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து, காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டவும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் காலை நடைபெற உள்ள எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. இதற்கிடையே, எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் உள்ளிட்ட 3 எம்.எல்.ஏக்கள் போயஸ் கார்டன் சென்று ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

நன்றி : தினத்தந்தி

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.