Breaking News
பிப். 22-ம் தேதி தி.மு.க. உண்ணாவிரத போராட்டம்: ஸ்டாலின்

இடைப்பாடி பழனிச்சாமியின் பினாமி அரசை கண்டித்து பிப். 22-ம் தேதி தி.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் கூறினார்.

தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியது.

* கடந்த 9 காலமாக தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு முழுமையாகசெயல்படவில்லை. ஜெயலலிதாவிற்கு அளித்த சிகிச்சை குறித்து அரசு தரப்பில் முழுமையாக அறிக்கையும் தரவில்லை. அவரது மரணத்தில் குழப்பமான தகவல்கள் தான் வெளி வருகின்றன.
* ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இன்று வரை நீடிக்கிறது. அண்ணாதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது தொடர்ந்து மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது.
* தமிழகத்தில் நிலையான ஆட்சி அமைக்க கவர்னரை தொடர்ந்து வலியுறுத்திவோம்.
* சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என கோரிக்கை வைத்தோம்.
* கூவத்தூரில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பிணைய கைதிகள் போல் வைக்கப்பட்டிருந்தனர்.
* சட்டசபையில் வாக்கெடுப்பு சுதந்திரமாக நடைபெறவில்லை. சட்டசபையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து முறையிட உள்ளோம். சந்திக்க நேரம் கேட்டுளோம்
* தற்போது நடக்கும் இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சியை மக்கள் விரும்பவில்லை. இடைப்பாடி பழனிச்சாமியின் பினாமி ஆட்சியை கண்டித்து தமிழகத்தில் பிப்.22-ம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.

நன்றி : தினமலர்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.