Breaking News
மானியம் அல்லாத கேஸ் சிலிண்டர் விலை ரூ.86 உயர்வு

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.86 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த விலை உயர்வு மார்ச் 1, 2017 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. மானிய சுமையைக் குறைக்கும் பொருட்டு அரசு இந்த விலை ஏற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்துக்கு பிறகு மானியம் அல்லாத 14.2 கிலோ சிலிண்டரின் விலை டெல்லியில் ரூ.737.50 ஆக இருக்கும்.

டீசலுக்கான மானிய சுமையிலிருந்து அரசு வெளிவந்த வழியை பின்பற்றி, சமையல் எரிவாயு மானிய சுமையிலிருந்து வெளியேற மத்திய அரசு திட்டமிட்டது. இதன்படி மாதம் ஒரு முறை குறிப்பிட்ட அளவு சமையல் எரிவாயுவுக்கான விலை உயர்த்தப்படுகிறது.

மானிய விலை சிலிண்டரும் விலை உயர்வு

மானிய விலை சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 13 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் மானிய விலையிலான 14.2 கிலோ சிலிண்டரின் விலை ரூ.434.93 ஆக இருக்கும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.