Breaking News
32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி வறட்சி நிவாரணம்: முதல்வர் தொடங்கிவைத்தார்

தமிழகத்தில் வறட்சியால் பாதிக் கப்பட்ட 32 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,247 கோடி இடுபொருள் நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் பருவமழை பொய்த்துவிட்டது. வடகிழக்கு பருவமழை மூலம் கிடைக்க வேண்டிய மழையின் அளவு மிகவும் குறைந்தது. இதனால் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டுள்ளது. நீர்நிலை கள், அணைகள் வறண்டதால் விவசாயம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பலர் அதிர்ச்சியிலும் தற்கொலை செய்துகொண்டும் உயிரிழந்தனர்.

தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. மத்திய அரசும் குழுவை அனுப்பி, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தது. வறட்சி நிவாரணமாக ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. இந்தத் தொகை மத்திய அரசால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இதற்கிடையே வருவாய், வருவாய் நிர்வாக ஆணையரகம், வேளாண்துறையினர் இணைந்து தமிழகம் முழுவதும் ஆய்வு நடத்தினர். அந்த ஆய்வில் 50 லட்சத்து 35 ஆயிரத்து 127 ஏக்கரில் 33 சதவீதத்துக்கும் மேல் பயிர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் 32 லட்சத்து 30 ஆயிரத்து 191 விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரண உதவித் தொகையாக ரூ.2,247 கோடி வழங்கப்படும் என கடந்த பிப்ரவரி 21-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இதில், நெல் மற்றும் இதர பாசன பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465, மானாவாரி பயிர்களுக்கு ரூ. 3 ஆயிரம், நீண்டகால பயிர்களுக்கு ரூ.7,287, பட்டுப்புழு வளர்ப்புக்கு ஏக்கருக்கு ரூ.3 ஆயிரம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த விழாவில், 31 விவசாயிகளுக்கு உதவித் தொகையை வழங்கி, வறட்சி நிவாரணம் வழங்கும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். அனைத்து மாவட்டங்களிலும் மின்னணு பணப்பரிவர்த்தனை மூலம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகையை செலுத்தவும், அதற்காக பயனா ளிகள் பட்டியலை கருவூலங் களில் சமர்ப்பிக்கவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப் பட்டது.

நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி யில் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள், தலை மைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், துறை செய லாளர்கள் சந்திரமோகன், ககன்தீப் சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் கே.சத்யகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.