Breaking News
மெட்ரோ ரயிலில் திருக்குறள் நீக்கம்; ஜொலிக்குது குளிர்பான விளம்பரங்கள்

மெட்ரோ ரயில்களில் இடம் பெற்றிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு, தனியார் விளம்பரங்கள் ஜொலிக்கின்றன.

திருக்குறள்:

சென்னை விமான நிலையம் – சின்னமலை; கோயம்பேடு – சின்னமலை இடையே மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மெட்ரோ ரயிலில், விளம்பரங்கள் வைக்க ஒப்பந்தம் கோரப்பட்டிருந்தது. பெட்டிகளின் உட்பகுதியில், விளம்பரம் வைக்க, எந்த அளவில் இடம் ஒதுக்கப்படும் என்பதை தெரிவிக்க, சில பெட்டிகளில், திருக்குறள் அச்சிடப்பட்ட, ‘போஸ்டர்’ ஒட்டப்பட்டிருந்தது.

நீக்கம்:

தனியார் குளிர்பானம் மற்றும், ‘டிவி’ நிறுவனங்கள் விளம்பரம் செய்ய முன்வந்ததை அடுத்து, 10 மெட்ரோ ரயில்களில், உட்புறம் வைக்கப்பட்டிருந்த திருக்குறள் நீக்கப்பட்டு, அந்த இடங்களில், குளிர்பான நிறுவனத்தின் விளம்பரங்கள் இடம்பெற்றுள்ளன.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.