ட்ரம்ப் கேர் மருத்துவ காப்பீடு மசோதா வாபஸ்
அமெரிக்க பார்லிமென்டில் ‘ட்ரம்ப் கேர்’ மருத்துவ காப்பீடு மசோதாவிற்கு டிரம்பின் சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்ததால் வாபஸ் பெறப்பட்டது.
அமெரிக்காவில் ‘ஒபாமாகேர்’ என்ற மருத்துவக்காப்பீடு திட்டம் முந்தைய ஒபாமா நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து வந்த டொனால்டு டிரம்ப், இதற்கு பதிலாக புதிய காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும் என தனது தேர்தல் பிரசாரத்தின் போதே அறிவித்தார். அதன்படி ஒபாமாகேர் திட்டத்தை நீக்க வகை செய்யும் புதிய காப்பீடு மசோதா ஒன்று உருவாக்கப்பட்டு பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டது.
மசோதா தோல்வி
மொத்தமுள்ள 435 உறுப்பினர்களில் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 235 உறுப்பினர்கள் உள்ளனர். . ஆனால் இந்த மசோதாவுக்கு டிரம்பின் சொந்த கட்சியினரே எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காமல் மசோதா தோல்வியடைந்தது. டிரம்ப் சார்பில் மசோதாவை தாக்கல் செய்த சபாநாயகர் பால் ரியான், மசோதாவை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.