Breaking News
மே 12-ல் வெளியாகிறது ‘சரவணன் இருக்க பயமேன்’

எழில் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ திரைப்படம் மே 12-ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

‘வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கத் தொடங்கினார் இயக்குநர் எழில்.

சூரி, ரெஜினா, யோகி பாபு, மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தனர். இமான் இசையமைத்துள்ள இப்படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்று, இறுதிகட்ட பணிகள் துவங்கப்பட்டது. விரைவில் தணிக்கை செய்யப்பட்டு, கோடை விடுமுறைக்கு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், சரவணன் இருக்க பயமேன்’ மே12ம் தேதி வெளியாகும்” என உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ மற்றும் ‘கவுரவ் இயக்கத்தில் உருவாகும் படம்’ ஆகியவற்றி கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.