தில்லு முல்லு செய்ய முடியாத புதிய மின்னணு இயந்திரங்கள் : தேர்தல் ஆணையம்
தில்லு முல்லு செய்தால் தானாகவே நின்று விடக்கூடிய அளவில் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தல்களில் மின்னணு ஒட்டு இயந்திரங்களில் பதிவான ஓட்டுக்கள் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே போகும்படி தில்லுமுல்லு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, அவ்வாறு செய்தால் தானாகவே நின்று விடக்கூடிய அளவில் புதிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ரூ.1940 கோடி செலவு
இந்த இயந்திரங்கள் அதிக பாதுகாப்பு வசதிகளைக் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.இது போன்ற இயந்திரங்களை வாங்குவதற்கு ரூ. 1,940 கோடி செலவாகும்.. இவை 2018 ஆம் ஆண்டில் வாங்கப்படும், அதாவது 2019 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கு முன்பாக இவை வாங்கப்படும் என்று கூறப்படுகிறது. தேர்தல் ஆணையம் தன்னிடமுள்ள 9,30,430 ஓட்டுப்பதிவு இயந்திரங்களை மாற்றப்போவதாக கூறியுள்ளது. இந்த மின்னணு இயந்திரங்கள் 15 ஆண்டுக்காலம் உழைத்துவிட்டன என்பதால் புதிய இயந்திரங்கள் வாங்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.