மியாமி ஓபன் டென்னிஸ்: ஜொஹன்னா கோன்டா பட்டம் வென்றார்
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் ஜொஹன்னா கோன்டா சாம்பியன் பட்டம் வென்றார்.
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டிகள் மியாமி நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான பிரிவில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங் கனையான ஜொஹன்னா கோன்டா, டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கியை எதிர்த்து ஆடினார். இப்போட்டியில் கோன்டா 6 4, 6 3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். கடந்த 40 ஆண்டுகளில் இங்கி லாந்து வீராங்கனை ஒருவர் பெரிய அளவிலான டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறை யாகும். மேலும் இந்த வெற்றியின் மூலம் பெண்களுக்கான டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் கோன்டா 7-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
லியாண்டர் பயஸ் வெற்றி
மெக்சிகோவின் லியான் நகரில் நடந்த லியான் சாலஞ்சர் டூர் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், சாம்பியன் பட்டம் வென்றார். கனடாவின் அடில் ஷமஸ்டினுடன் ஜோடி சேர்ந்து ஆடிய அவர், நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தின் லுகா மார்கரோலி – பிரேசிலின் கரோ சாம்பியேரி ஜோடியை எதிர்கொண்டார். இப்போட்டியில் பயஸ் – அடில் ஜோடி 6-1 6-4 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இது இந்த சீசனில் லியாண்டர் பயஸ் வென்ற முதலாவது ஏடிபி பட்டம் என்பது குறிப்பிடத் தக்கது.