Breaking News
‘மூன்று முகம்’ தலைப்பு: அட்லீ – விஜய் படக்குழு மறுப்பு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் தலைப்பு ‘மூன்று முகம்’ அல்ல என்று படக்குழுவினர் மறுப்பு தெரிவித்தார்கள்.

‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து, ராஜஸ்தானில் படப்பிடிப்பு நடத்த இடங்களை தேர்வு செய்ய சென்றுள்ளது படக்குழு.

சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

பல்வேறு கெடுபிடிகளுக்கு இடையே இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் புகைப்படங்கள் வெளியானதால் படக்குழு பெரும் அதிர்ச்சியடைந்தது.

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு ‘மூன்று முகம்’ என படக்குழுவினர் பெயரோடு அடங்கிய வடிவமைப்பு ஒன்று இணையத்தில் வெளியானது. இதனால் ‘மூன்று முகம்’ தான் தலைப்பு என தகவல்கள் வெளியானது.

இது குறித்து படக்குழுவினரிடம் விசாரித்தபோது, “தலைப்பு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இணையத்தில் வெளியாகியிருப்பது ரசிகர் ஒருவர் வடிவமைத்தது. அதற்கும் படக்குழுவினருக்கும் சம்பந்தமில்லை” என்று தெரிவித்தார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.