பூமியை கடக்க உள்ள விண்கல்
விண்ணில் சுற்றி வரும், 600 மீட்டர் அகலம் கொண்ட பிரமாண்ட விண்கல் ஒன்று ஏப்., 19ம் தேதி பூமிக்கு மிக அருகே கடந்து செல்ல உள்ளது.
அமெரிக்காவின் அரிசோனா பல்கலை விஞ்ஞானிகள், 2014 மே மாதம் இந்த விண்கல்லை கண்டுபிடித்தனர். இதற்கு, ‛2014 ஜெஓ25′ என, பெயரிட்டனர். இந்த விண்கல், 18 லட்சம் கி.மீ., தொலைவில், ஏப்., 19ம் தேதி பூமியை கடந்து செல்ல உள்ளது. இந்த விண்கல், பூமி மீது மோத வாய்ப்பு இல்லை. இருப்பினும், இவ்வளவு நெருக்கத்தில் இதுபோன்ற பிரமாண்ட விண்கல் பூமி அருகே கடந்து செல்வது வியப்பை அளிக்கிறது என, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‛நாசா’ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.