Breaking News
அடையாளம் மாறும் அமலாபால் கவர்ச்சி போஸில் அசத்தல்

மைனா படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்த அமலா பால் மெதுவாக நகரத்து பெண்ணாக மாடர்ன் உடைகளில் நடிக்கத் தொடங்கினார். ஓவர் கிளாமர் எல்லையை தொடுவதற்கு முன்பாகவே இயக்குனர் விஜய்யை மணந்தார். ஒன்றிரண்டு வருடங்களிலேயே இவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். மீண்டும் நடிப்பில் கவனத்தை திருப்பியிருக்கிறார் அமலாபால். திருமணம் ஆன நடிகை என்பதால் அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு தர இயக்குனர்கள் தயக்கம் காட்டினர். அதை உடைக்கும் விதமாக, தான் தயாரித்த அம்மா கணக்கு படத்தில் நாயகி வேடம் அளித்தார் தனுஷ்.

அடுத்து தான் நடிக்கும் வட சென்னை படத்தில் ஜோடியாக ஒப்பந்தம் செய்தார். இது அமலாபாலுக்கு புது தெம்பை அளித்தது. சிண்ட்ரல்லா, திருட்டு பயலே 2, பாஸ்கர் ஒரு ராஸ்கல் என அவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்தன. இந்தியில் கங்கனா ரனாவத் நடித்த குயின் பட மலையாள ரீமேக்கிலும் நடிக்கிறார்.
தனுஷ் இந்தி படங்களில் நடித்திருப்பதால் அவர் வாயிலாக அமலாபாலுக்கு இந்தி பட வாய்ப்பும் வரும் என்ற பேச்சு உள்ளது.

இந்தி படங்களுக்கு ஏற்ப தனது தோற்றத்தை மாற்ற தொடர்ச்சியான பயிற்சி, சிகை அலங்கார சீரமைப்பு போன்றவற்றில் கவனம் செலுத்தி வந்த அமலாபால் அதற்கு தகுதியாகிவிட்டாராம். சமீபத்தில் பாலிவுட் ஹீரோயின்கள் பாணியில் கவர்ச்சி காஸ்டியூம் அணிந்து பலவித போஸ்களில் ஸ்டில்ஸ் எடுத்து அதனை இணைய தளத்தில் வெளியிட்டிருப்பதுடன் சில பாலிவுட் இயக்குனர்கள் பார்வைக்கும் அனுப்பியிருக்கிறார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.