Breaking News
ஒபாமாவின் மகளுக்கு ‘டார்ச்சர்’ : அமெரிக்க நபர் கைது

ஒபாமாவின் மகள் மாலியாவிடம் தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தியவரை போலீசார் கைது செய்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மகள் மாலியா, 18, நியூயார்க் மான்கேட்டன் நகரில் படித்து வருகிறார். அவர் வகுப்புக்கு செல்லும் போது, அவரை பின்தொடர்ந்த ஜெயர் நில்டன் கார்டோசோ,30, என்பவர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதை பார்த்த மாலியாவின் பாதுகாவலர்கள் கார்டோசாவை கைது செய்தனர்.அவரிடம் விசாரித்ததில்,அவர் ஏற்கனவே ஒபாமா அதிபராக இருந்த போது வெள்ளை மாளிகையில் மாலியாவை பார்க்க முயற்சித்தது தெரிந்துள்ளது. கார்டோசாவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.