Breaking News
டிரம்ப் பதவியேற்பு விழா : ரூ.706 கோடி நன்கொடை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவுக்காக ரூ.706 கோடி நன்கொடை திரட்டி புதிய சாதனை படைத்துள்ளார். டிரம்பின் பதவியேற்பு விழாவுக்காக நன்கொடை வழங்கியவர்கள் குறித்த விவர அறிக்கையை, பதவியேற்பு விழாக் குழுவினர் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். இதுதொடர்பாக விழாக்குழுவினர் வெளியிட்ட அறிக்கை: சமீபகால வரலாற்றில் பொதுமக்கள் எளிதாக பங்கேற்கும் வகையில், டிரம்பின் பதவியேற்பு விழா அமைந்திருந்தது. குறிப்பாக மற்ற அதிபர்களின் விழாக்களை விட எளிமையாக நடந்தது.

இதுகுறித்து முன்னாள் அதிபர் ஒபாமாவின் பதவியேற்பு விழாக் குழு தலைமை செயல்
அதிகாரியாக இருந்த ஸ்டீவ் கெரிகன் கூறுகையில், “ஒபாமா பதவியேற்பு விழாவின்போது திரட்டப்பட்ட நன்கொடையை விட, இப்போது 2 மடங்கு நிதி திரட்டப்பட்டுள்ளது”, என்றார்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.