Breaking News
மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?

வரும், 26ல், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்து, மூன்றாண்டுகள் நிறைவுபெறுவதையொட்டி, பிரம்மாண்ட கொண்டாட்டங்கள் நடக்க உள்ளன. அதன் பின், மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடியும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷாவும், கட்சி மற்றும் அரசில்ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து, தீவிரஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ள சிலரை, கட்சிப் பணியில் ஈடுபடுத்த, அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அவர்களின் இடத்தில் வேறு சிலர், புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பார்கள்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.