நிதி ஆதாரங்களை பெருக்க ஜி.எஸ்.டி.,உதவும்: ரிசர்வ் வங்கி
மாநிலங்களின் நிதி ஆதாரங்களை பெருக்க ஜி.எஸ்.டி., உதவும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வரும் ஜூலை 1 முதல் நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பு முறையான ஜி.எஸ்.டி., அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில், ஜி.எஸ்.டி., குறித்து ரிசர்வ் வங்கி தெரிவித்ததாவது: மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயலாற்றும் பாலமாய் அமைந்துள்ள ஜி.எஸ்.டி., மசோதா, மாநிலங்களின் நிதி ஆதாரங்களை பெருக்கும். கூட்டாட்சிக்கு வலு சேர்க்கும். ஜி.எஸ்.டி., அறிமுகம் ஆவதன் மூலம் வளர்ச்சி, பணவீக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உருவாகும். இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.