Breaking News
அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் ஐடி ரெய்டு

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. விஜயபாஸ்கர் வீட்டில் ஏப்ரல் மாதம் 7 ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இது தொடர்பாக விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பப்பட்டது. இவர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், இன்று மீண்டும் சோதனை நடக்கிறது.கடந்த ஏப்ரல் 7 ல் நடந்த சோதனையின் போது விஜயபாஸ்கர் வீட்டில் கிடைத்த நகைகள், ஆவணங்கள் ஆகியவை லாக்கரில் வைத்து சீல் வைக்கப்பட்டது. இதனை அதிகாரிகள் தற்போது சரி பார்த்து வருகின்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.