Breaking News
நட்புரீதியிலான கால்பந்து போட்டி: இந்தியா – நேபாளம் 6-ம் தேதி மோதல்

நட்புரீதியிலான கால்பந்து போட்டியில் இந்தியாவுடன் விளையாட லெபனான் அணி மறுத்துள்ள நிலையில் மாற்று அணியாக நேபாள அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா – லெபனான் அணிகள் இடையே நட்புரீதியிலான கால்பந்து போட்டி வரும் ஜூன் 7-ம் தேதி மும்பையில் நடைபெறு வதாக இருந்தது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இருந்து லெபனான் விலகியது. வீரர்களின் விசா நடை முறைகளில் சிக்கல் நீடிப்பதால் இந்த முடிவை எடுத்ததாக லெபனான் தெரி வித்தது.

ஆசிய கோப்பை தகுதி சுற்று ஆட்டத்தில் இந்திய கால்பந்து அணி ஜூன் 13-ம் தேதி பெங்களூருவில் கிர்கிஸ்தான் குடியரசு அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இதற்கு பயிற்சி பெறும் வகையிலேயே லெபனான் அணிக்கு எதிராக நட்புரீதியிலான ஆட்டத்தில் விளையாட இந்திய அணி திட்டமிட்டிருந்தது.

லெபனான் அணி விலகிய நிலையில் வேறு நாட்டு அணியுடன் நட்புரீதியிலான ஆட்டத்தை நடத்துவது குறித்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஆலோசனை நடத்தியது. இந்நிலையில் மாற்று ஏற்பாடாக நேபாளம் அணியுடன் இந்திய அணி நட்புரீதியிலான ஆட்டத்தில் விளையாடும் என அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

அதேவேளையில் இந்த ஆட்டம் 7-ம் தேதிக்கு பதிலாக 6-ம் தேதி மும்பை அந்தேரி விளையாட்டு வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு தெற்கு ஆசிய கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட சாம்பியன்ஷிப் போட்டியில் மோதின. இதில் இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.