புகையிலை, நிகோடின் கலந்திருக்கும் பான்மசாலா, குட்காவுக்கு ஓராண்டு தடை; தமிழக அரசு உத்தரவு
உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கக்கூடியது என்பதால் புகையிலை மற்றும் நிகோடின் போன்றவை எந்தவொரு உணவு பொருளுடனும் கலக்கப்படக்கூடாது என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டம் குறிப்பிடுகிறது.
குட்கா மற்றும் பான்மசாலா என்ற உணவு பொருட்களில் புகையிலை மற்றும் நிகோடின் ஆகிய பொருட்கள் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் குட்கா மற்றும் பான்மசாலா ஆகிய பொருட்களை தடை செய்வது, தற்போதைய சூழ்நிலைக்கு அவசியமாகிறது.
குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை, நிகோடின் கலந்துள்ள எந்த பெயர் கொண்ட பொருளாக இருந்தாலும், அவற்றை தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, வினியோகம் செய்யவோ, விற்கவோ கூடாது. மே 23–ந் தேதியில் இருந்து மேலும் ஓராண்டுக்கு தடை செய்ய உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.