Breaking News
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் வாவ்ரிங்கா, ஸ்விட்டோலினா வெற்றி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி யில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான வாவ்ரிங்கா 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஆண்டின் 2-வது கிராண்ட் ஸ்லாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 3-வது நாளான நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் 8-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷி கோரி, தகுதி நிலை வீரரான தானாசி கொக்கினாகிஸை எதிர்த்து விளையாடினார். இதில் நிஷி கோரி 4-6, 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

3-ம் நிலை வீரரான சுவிட்சர் லாந்தின் வாவ்ரிங்கா, 6-2, 7-6, 6-3 என்ற நேர் செட்டில் 152-ம் நிலை வீர ரான சுலோவேக்கியாவின் ஜோசப் கோவிலக்கை வீழ்த்தினார். 29-ம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போர்ட்டோ 6-2, 6-1, 6-4 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த 115-ம் நிலை வீரரான கைடோ பெல்லாவை தோற்கடித்தார்.

ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் வென்ற 19 வயதான இளம் வீரரான ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஜிவெரேவ் தனது முதல் சுற்றில் தோல்வியடைந்தார். 9-ம் நிலை வீரரான அவர் 4-6, 6-3, 4-6, 2-6 என்ற செட் கணக்கில் 37-ம் நிலை வீரரான ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ விடம் வீழ்ந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 7-ம் நிலை வீராங்கனையான ஜோஹன்னா கோன்டா 6-1, 6-7, 4-6 என்ற செட்கணக்கில் போராடி 109-ம் நிலை வீராங்கனையான சீன தைபேவின் சூ-வெய் ஹெசியிடம் தோல்வியடைந்தார்.

5-ம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விட்டோ லினா 6-4, 6-3 என்ற நேர் செட்டில் 45-ம் நிலை வீராங்கனையான கஜ கஸ்தானின் யரோஸ்லாவா ஷ்வே டோவாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் பிரான்சின் அலிஸ் கார்நெட், பல் கேரியாவின் பைரன்கோவா, ருமே னியாவின் சொர்னா கிறிஸ்டியா ஆகியோர் வெற்றி பெற்றனர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.