Breaking News
வலைகளின் துளை வழியே இனி எதிர்காலத்தை பார்க்க முடியாது: உருக்கமாக விடை பெற்றார் பிரான்செஸ்கோ டோட்டி

இத்தாலியின் ஏஎஸ் ரோமா கால்பந்து கிளப்புக்காக நீண்ட காலமாக விளையாடி வந்த பிரான்செஸ்கோ டோட்டி கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார்.

24 ஆண்டு காலம் ரோமா அணிக்காக விளையாடி வந்த டோட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இத்தாலி சீரி ஏ போட்டியில் ஜெனோவா அணிக்கு எதிராக விளையாடினார்.

தலைநகரான ரோமில் நடை பெற்ற இந்த ஆட்டத்தில் ரோமா அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் எடின் ஸேகோ, டேனியல் டி ரோஸ்ஸி, தியாகோ பெரோட்டி ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.

இந்த ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் முகமது சாலாவுக்கு மாற்று வீரராக பிரான்செஸ்கோ டோட்டி களமிறக்கப்பட்டார். 40 வயதான அவர் இந்த ஆட்டம் நிறைவடைந்ததும் கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கண்ணீர் மல்க அறிவித்தார்.

ஓய்வு பெற்ற பிரான்செஸ்கோ டோட்டி பல்லாயிரக் கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கண்ணீர் மல்க பேசும்போது, “இதுபோன்ற வாழ்க்கை இனிமேல் அமையுமா என்பது தெரியவில்லை. வாழ்க்கை யின் ஒரு கட்டத்தில் நீங்கள் வளர வேண்டும். இதை தான் நான் கூறி வருகிறேன். இதை காலம் தான் முடிவு செய்யும்.

காலம் ஒவ்வொரு மனிதனின் தோள்களையும் தட்டிக் கொண்டே தான் இருக்கிறது. எதிரிகள் அடிக் கும் கோல்களை கண்டு அச்சம் அடைந்துவிட்டால், பசும்புல்லின் வாசம், பிரகாசமான சூரியனின் கதிர்வீச்சை நீண்ட நாட்களுக்கு உங்களால் மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியாது.

விளக்கை அணைப்பது எளி தானது அல்ல. எனக்கு பயமாக இருக்கிறது. பெனால்டிக்காக கோல்கம்பத்தின் முன்பு நிற்கும் போது உங்களுக்கு ஏற்படும் பயம் போன்றது இது கிடையாது. இனி வலைகளின் துளை வழியே பார்ப் பது போல எதிர்காலம் அமையாது. ஆனால் உங்களது ஆதரவுடன், நிச்சயம் நான் வெற்றியின் பக்கங்களை திருப்புவேன். புதிய சாகசத்தையும் நிகழ்த்துவேன்.

இந்த அணிக்கு கேப்டனாக இருந்தது எனக்கு பெருமை அளிக் கிறது. எனது கால்கள் மூலம் நீண்ட நாட்களுக்கு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த முடியாது என்பது உண்மை தான். ஆனால் எனது இதயம் உங்களுக்காகவே எப்போதும் துடித்துக் கொண்டிருக் கும். ரோமா அணியின் வீரர்கள் அறை, என்னை ஒரு குழந்தையாக வரவேற்றது. தற்போது ஒரு பெரிய மனிதனாக அதில் இருந்து வெளியேறுகிறேன்” என்றார்.

பிரான்செஸ்கோ டோட்டி கடந்த 1993-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி ரோமா அணிக்காக அறிமுக வீர ராக களமிறங்கினார். அப்போது அவருக்கு வயது 16. ரோமா அணிக் காக 24 ஆண்டு காலம் வாழ்க் கையை அர்ப்பணித்த பிரான் செஸ்கோ டோட்டி, அந்த அணிக் காக 786 ஆட்டங்களில் விளையாடி 307 கோல்கள் அடித்துள்ளார். இதில் 250 கோல்கள் இத்தாலி சீரி ஏ தொடர்களில் அடிக்கப்பட்டதாகும்.

2001-ம் ஆண்டில் ரோமா அணி, இத்தாலி சீரி ஏ தொடரில் பட்டம் வென்றது. இந்த வெற்றியில் பிரான்செஸ்கோ டோட்டி முக்கிய பங்கு வகித்தார்.

தற்போது ஜெனோவா அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் லீக் ஆட்டங்களுக்கான பிளே ஆப் சுற்றில் விளையாட ரோமா அணி தகுதி பெற்றது.

இத்தாலி சீரி ஏ தொடரில் ஜூவென்டஸ் அணி 38 ஆட்டங் களில், 29 வெற்றி, 4 டிரா, 5 தோல்வி களுடன் 91 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோமா அணி 38 ஆட்டங்களில் 28 வெற்றி, 3 டிரா, 7 தோல்விகளுடன் 87 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்தது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.