Breaking News
நான் பிரபாஸ் அம்மாவா? அதிர்ச்சியடைந்த நடிகை

பாகுபலி படத்தில் பிரபாஸ் அம்மாவாக சிவகாமி கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்தத்தை பிரபல நடிகை லட்சுமி மஞ்சு ஒப்புக்கொண்டார்.

பாகுபலி படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து அந்த படத்தில் முதலில் நடிக்க மறுத்த நடிகர் மற்றும் நடிகைகள் குறித்து செய்திகள் வலம் வந்தது. ரம்யா கிருஷ்ணன் நடித்த சிவகாமி நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் ஸ்ரீதேவியிடம் தான் கேட்டப்பட்டது. ஆனால் அவர் அதில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற செய்தி வெளியாகியது குறிப்பிடத்தக்கது.

அதே சிவகாமி கதாபாத்திரத்தை நிராகரித்த இன்னொரு நடிகை தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்த பல செய்திகள் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் தானே முன்வந்து நிராகரிப்பு குறித்து தெரிவித்துள்ளார். தெலுங்கு பிரபல நடிகை லட்சுமி மஞ்சு, இவர்தான் அந்த சிவகாமி கதாபாத்திரத்தை நிராகரித்த இன்னொரு நடிகை. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

ஆமாம், நான் நிராகரித்தது உண்மைதான். நான் சிவகாமி கதாபாத்திரத்தை நிராகரிக்கவில்லை. ஆனால், பிரபாஸ் அம்மாவாக நடிக்க மறுப்பு தெரிவித்தேன். எப்படி நான் பிரபாஸ் அம்மாவாக நடிக்க முடியும்? என்று தெரிவித்துள்ளார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.