Breaking News
சாம்பியன்ஸ் லீக் கால்பந்தில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஜூவென்டஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இதன் மூலம் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து வரலாற்றில் முதன்முறை யாக பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட முதல் அணி என்ற சாத னையை ரியல் மாட்ரிட் படைத்தது. நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்கள் அடித்து வெற்றிக்கு உதவினார்.

கார்டிப் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 20-வது நிமிடத்தில் ரொனால்டோ அடித்த கோலால் ரியல் மாட்ரிட் 1-0 என முன்னிலை பெற்றது. ஆனால் அடுத்த 7-வது நிமிடத்தில் ஜூவென்டஸ் அணி பதிலடி கொடுத்தது. மரியோ மேன்ட்சூயிக் அடித்த இந்த கோலால் முதல் பாதி ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

2-வது பாதியில் ரியல் மாட்ரிட் அணி மேலும் 3 கோல்கள் அடித்து மிரளச் செய்தது. 61-வது நிமிடத்தில் கேஸ்மிரோ, 64-வது நிமிடத்தில் ரொனால்டோ, 90-வது நிமிடத்தில் மார்கோ சென்சியோ ஆகியோர் அடித்த கோலால் ரியல் மாட்ரிட் அணி 12-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மேலும் அந்த அணி கடந்த 4 ஆண்டுகளில் வெல்லும் 3-வது பட்டம் இதுவாகும். இந்த ஆட்டத் தில் கோல் அடித்ததன் மூலம் 3 இறுதிப் போட்டிகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரொனால்டா படைத்தார். 2014 மற்றும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் ரொனால்டோ கோல் அடித்திருந்தார்.

மேலும் இந்த சீசனில் அதிக கோல் அடித்திருந்த லயோனல் மெஸ்ஸியின் (11 கோல்கள்) சாதனையையும் ரொனால்டோ தகர்த்தார். ரொனால்டோ இந்த சீசனில் 12 கோல்கள் அடித்துள்ளார்.

வெற்றி குறித்து ரொனால்டோ கூறும்போது, ‘‘சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் தொடர்ச்சியாக 2-வது முறையாக பட்டம் வென்ற வென்ற முதல் அணி என்ற பெருமையை நாங்கள் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இந்த சீசனை மிகச்சிறப்பாக நான் நிறைவு செய்துள்ளேன். இது மற்று மொரு சாதனையாகும், இந்த சாத னைக்கு ரியல் மாட்ரிட் அணி வீரர் கள் தகுதியானவர்கள்” என்றார்.

1958-ம் ஆண்டுக்கு பிறகு முதன்முறையாக ரியல் மாட்ரிட் அணி, லா லிகா மற்றும் சாம்பியன் லீக் தொடர் என ஒரே சீசனில் இரு சாம்பியன் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் அந்த அணி கிளப் அளவி லான உலகக் கோப்பை, ஐரோப்பிய சூப்பர் கோப்பை தொடர்களையும் வென்றுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.