Breaking News
அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா பாக்.?- தென் ஆப்ரிக்க அணியுடன் இன்று மோதல்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பிர்மிங்காமில் இன்று நடை பெறும் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்த்து பாகிஸ்தான் ஆடுகிறது. இத்தொட ரின் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதிபெற வேண்டுமானால் தென் ஆப்ரிக்காவை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றதால் பாகிஸ் தான் அணிக்கு அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த எதிர்ப்பு அலையில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், இத்தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெற்றாக வேண்டும் என்ற நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. இந்த இக்கட்டான நிலையில் பாகிஸ்தான் இன்று தென் ஆப்ரிக்காவைச் சந்திக்கிறது.

ஒருநாள் போட்டித் தொடரை பொறுத்தவரை தென் ஆப்ரிக்க அணி தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது. அதனால் அந்த அணியை தோற்கடிக்க பாகிஸ்தான் அணி கடுமையாக போராட வேண்டியிருக்கும்.

இந்தியாவிடம் முதல் போட்டியில் தோற்றபோதிலும், பாகிஸ்தான் அணி, எளிதில் கணிக்க முடியாத அணியாகவே உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டில் பல போட்டிகளில் முன்னணி அணிகளை வீழ்த்தி பாகிஸ்தான் அதிர்ச்சி அளித்துள்ளது. எனவே பாகிஸ்தான் அணியை தென் ஆப்ரிக்காவால் அத்தனை எளிதில் ஒதுக்கித்தள்ள முடியாது.

பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலமாக பந்துவீச்சு உள்ளது. அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளரான வஹாப் ரியாஸ், காயத்தால் பாதிக்கப்பட்டு தொடரில் இருந்து வெளியேறிய போதிலும், ஜூனைத் கான், முகமது அமிர், ஷடப் கான் என்று தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் பலர் இருக்கிறார்கள். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் சொதப்பினாலும், தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் சர்ப்ராஸ் அகமது, அகமது ஷேசாத், அசார் அலி, ஷோயிப் மாலிக் ஆகியோரைக் கொண்ட வலுவான பேட்டிங் வரிசையையும் பாகிஸ்தான் அணி கொண்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வரலாற்றை எடுத்துக்கொண்டால், எப்போதெல்லாம் மோசமான தோல்வியை சந்திப்பார்களோ, அப்போதெல்லாம் அடுத்த போட்டி யில் மிகச் சிறப்பான வெற்றியை பெற்று தங்கள் இமேஜை சீர்படுத்தியுள்ளனர். அந்த வகையில் இன்றைய போட்டியிலும் அவர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் முதல் போட்டியில் இலங்கையை வென்ற தென் ஆப்ரிக்க அணி, இப்போட்டியில் வெல்வதன் மூலம் எந்த டென்ஷனும் இல்லாமல் அரையிறுதிச் சுற்றுக்கு நுழையும் எதிர்பார்ப்பில் உள்ளது. தொடக்க ஆட்டக்காரரான ஹசிம் ஆம்லா, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு கூடுதல் பலமாக உள்ளது. டி காக், டுபிளெஸ்ஸிஸ், டிவில்லியர்ஸ், மில்லர் ஆகியோர் அவருக்கு தோள்கொடுக்கும் வகை யில் ஆடினால் தென் ஆப்ரிக்க அணியை கட்டுப்படுத்துவது மிகவும் சிரமமாக இருக்கும். பேட்டிங்கை போலவே பந்து வீச்சிலும் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக விளங்கு கிறது. காகிசோ ராபாடா, இம்ரன் தகிர், மோர்க்கெல் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆவேசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். எனவே இன்றைய போட்டியில் வெல்ல பாகிஸ்தான் அணி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.

அணிகள் விவரம்:

பாகிஸ்தான்:

சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), அகமது ஷேசாத், அசார் அலி, பாபர் அசாம், பாஹிம் அஸ்ரப், பஹர் ஜமான், ஹசன் அலி, இமாத் வாசிம், ஜூனைத் கான், முகமது அமிர், முகமது ஹபீஸ், ஷதப் கான், ஷோயிப் மாலிக், உமர் அக்மல்.

தென் ஆப்ரிக்கா:

டி வில்லியர்ஸ் (கேப்டன்), ஹசிம் ஆம்லா, பர்ஹான் பெகார்டியன், டுமினி, குயிண்டன் டி காக், டு பிளெஸ்ஸிஸ், கேசவ் மகாராஜ், டேவிட் மில்லர், மோர்ன் மோர்க்கெல், கிறிஸ் மோரிஸ், வெயின் பார்நெல், அன்டில் பெலுக்வயோ, டுவைன் பிரிட்டோரியஸ், காகிசோ ராபாடா, இம்ரன் தகிர்.

நேரம்: மாலை 6

இடம்: பர்மிங்காம்

நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.