Breaking News
ஹாக்கியில் இந்தியா தோல்வி

ஜெர்மனியில் உள்ள டசல் டோர்ப் நகரில் 3 நாடுகள் ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொண்டது. இப்போட்டியின் ஆரம்பத்தில் இந்திய அணி சிறப்பாக ஆடியபோதிலும், போகப்போக ஆட்டத்தில் ஜெர் மனியின் ஆதிக்கம் கூடியது.

7-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் பிரின்ஸ், ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். இதைத் தொடர்ந்து ஆட்டத்தை மீண்டும் சமநிலைக்கு கொண்டுவர இந்திய வீரர்கள் போராடினர். ஆனால் அவர்களின் முயற்சி களை ஜெர்மனி வீரர்கள் முறியடித்தனர். இந்நிலையில் ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் டிம் ஹெர்ஸ்பிரச் அடித்த கோலின் மூலம் ஜெர்மனி அணி 2-0 என வெற்றி பெற்றது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.