Breaking News
கொலை நடக்கும் முன் கோடநாட்டில் பூஜை?

கோடநாடு பங்களாவில், கொலை சம்பவம் நடப்பதற்கு முன், பூஜை நடந்தது’ என, இரு குற்றவாளிகள் தாக்கல் செய்த ஜாமின் மனுவில் இருந்த தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், கோத்தகிரி கோடநாடு எஸ்டேட் பங்களாவில், ஏப்., 24ல், காவலாளி ஓம்பகதுார் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த பங்களாவின் ஜன்னல் கம்பிகளை உடைத்து, பலர் நுழைந்து கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டனர். இதில், தொடர்புடையதாக கேரளாவைச் சேர்ந்த, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், சமீர் அலி, ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி ஆகியோருக்கு, வழக்கறிஞர் ரவிச்சந்திரன் என்பவர், ஜாமின் கேட்டு நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், ஜித்தன் ஜாய், மனோஜ் சாமி ஆகியோர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவில், ‘நாங்கள் கேரளாவில் உள்ள வீடுகளில் உள்ள தீய சக்திகளை விரட்டும் பணிகள், சிறப்பு பூஜைகளை செய்து வந்தோம். ‘கோடநாடு பங்களாவில், சிறப்பு பூஜைகளை செய்ய வேண்டும்’ என, நிர்வாகத்தை சார்ந்தவர்கள், எங்களை இங்கு அழைத்து வந்தனர்.’அங்கு கொலை, கொள்ளை நடப்பதற்கு முன்னதாகவே, இத்தகைய பூஜைகளை செய்தோம். அதன்பின், அங்கு நடந்த கொலை, கொள்ளை குறித்து போலீசாரின் விசாரணை நடந்துள்ளது. அதில், நாங்களும் அங்கு வந்ததை அறிந்த போலீசார், எங்களையும் கைது செய்தனர். ஆனால், அங்கு நடந்த சம்பவங்களுக்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை. எனவே, எங்களுக்கு ஜாமின் வழங்க வேண்டும்’ என, கூறியுள்ளனர்.இவர்கள் மீது கேரளாவில் சில வழக்குகள் நிலுவையில் இருந்ததால், இவர்களுக்கு ஊட்டி கோர்ட் ஜாமின் மறுத்தது.-

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.