Breaking News
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பணம், பயிற்சி கிடைப்பது எப்படி?

‘‘ஆப்கானிஸ்தானில் பலம் வாய்ந்த உலகப் படைகளை எதிர்த்து வன்முறைகளில் ஈடுபட, தீவிரவாதிகளுக்கு எங்கிருந்து ஆயுதங்கள், பணம், பயிற்சி கிடைக்கிறது’’ என்று ஐ.நா. சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி தூதர் சையது அக்பருதீன் கேள்வி எழுப்பினார்.

ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன் சில் கூட்டத்தில் விவாதம் நடை பெற்றது. இதில் பாகிஸ்தானை மறைமுகமாகக் குற்றம் சாட்டி ஐ.நா.வுக்கான இந்திய தூதர் சையது அக்பருதீன் நேற்று முன்தினம் பேசியதாவது:

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படைகள், ஆப்கன் ராணுவம் ஆகியவை இணைந்து தீவிரவாத ஒழிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. பலம் வாய்ந்த அந்தப் படைகளுக்கு எதிராக தீவிரவாதிகள் தொடர்ந்து வன்முறைகளில் ஈடுபட்டு வரு கின்றனர். தீவிரவாதிகளுக்கு அந்த அளவுக்கு எங்கிருந்து ஆயுதங்கள் வருகின்றன, எங்கிருந்து பணம் வருகிறது, எங்கிருந்து பயிற்சி கிடைக்கிறது. இது பற்றி எல்லாம் ஐ.நா. உறுப்பு நாடுகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஆப்கானில் நாளுக்கு நாள் வன்முறை அதிகரிப்பது வழக்க மாகிவிட்டது. தீவிரவாதிகள் கொடூரமாக நடந்து கொள்கின் றனர். அரசுக்கு எதிரான இந்த தீய சக்திகளுக்கு எல்லா உதவி களும் எங்கிருந்து கிடைக்கிறது. தீவிரவாதிகள் எங்கு பாதுகாப்பாக உள்ளனர் அல்லது எங்கு தஞ்சம் அடைகின்றனர். உலக நாட்டு படைகளுக்கு எதிராக செயல்படு வது எப்படி சாத்தியமாகிறது. இதைப் பற்றி எல்லாம் உறுப்பு நாடுகள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தீவிரவாதிகளில் நல்லவர், கெட்டவர் என்று உலக நாடுகள் பிரித்துப் பார்க்க கூடாது. தலிபான், ஹக்கானி நெட்வொர்க், அல் காய்தா, லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகம்மது போன்ற பல தீவிரவாத அமைப்புகளில் பெரும்பாலானவற்றை ஐ.நா. தடை செய்யப்பட்ட அமைப்புகளாக பட்டி யலிட்டுள்ளது. அந்த அமைப்பு களின் செயல்பாடுகளுக்கு எந்த வொரு நியாயத்தையும் கற்பிக் காமல், அனைத்தையும் தீவிரவாத அமைப்புகளாக கருத வேண்டும்.

சர்வதேச சட்ட திட்டங்களையும், மனித உரிமைகளையும் மீறி செயல்படும் இதுபோன்ற அமைப்புகளால் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில் ஆப்கானிஸ் தானில் பெருமளவு மனித உயிர் கள் பலியாவதற்கு அடிப்படை காரணத்தை உலக நாடுகள் புரிந்து கொள்ளவில்லை அல்லது பிரச்சினைகளை அலசி ஆராய விரும்பவில்லை என்றே தோன்று கிறது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத தாக்குதல்களை கூட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டிப்பதில்லை.

இவ்வாறு இந்திய தூதர் அக்பருதீன் பேசினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.