ஒரே பாலின திருமணம் : ஜெர்மனியில் அனுமதி
ஜெர்மனியில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு, அந்நாட்டு பார்லி., ஒப்புதல் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான, ஜெர்மனியில், ஓரின சேர்க்கையாளர்கள் பலர் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்; ஒரே பாலினத்தைச் சேர்ந்த தாங்கள், திருமணம் செய்து கொள்ள அனுமதிக்க கோரி, நீண்ட காலமாக போராடி வருகின்றனர். ஆனால், மதவாதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள், சட்டப்படி திருமணம் செய்து கொள்ள வகை செய்யும் சட்ட மசோதாவை, ஜெர்மன் பார்லிமென்ட்டில், அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல், நேற்று கொண்டு வந்தார். பார்லிமென்ட்டின் மேல்சபை ஏற்கனவே இதற்கு ஒப்புதல் அளித்த நிலையில், கீழ்சபையில் மொத்தமுள்ள, 393 எம்.பி.,க்களில், 226 பேர் மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்தனர். இதன் மூலம், ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்தெடுக்கவும், இந்த சட்டம் வகை செய்கிறது.