Breaking News
பயங்கரவாதி சயீத் அமைப்பிற்கு பாகிஸ்தான் அரசு திடீர் தடை

மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியான, பயங்கரவாதி ஹபீஸ் சயீத் அமைப்பிற்கு, அமெரிக்காவின் நெருக்கடியை தொடர்ந்து, பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

நாச வேலை ; மும்பையில், 2008ல் நடந்த தாக்குதலில் மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். இவனது, ஜமாத் – உத் – தாவா அமைப்பு, ஜம்மு – காஷ்மீரில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.இந்த அமைப்பிற்கு எதிராக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளன. இதையடுத்து, தன் அமைப்பின் பெயரை தெஹ்ரிக் – இ – ஆசாதி காஷ்மீர் என்று, அவன் மாற்றினான்.பாகிஸ்தானில் தற்போது தங்கியுள்ள அவன், அங்கு போராட்டங்களில் ஈடுபட்டான்; இதையடுத்து, அங்கு, வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளான். இந்நிலையில், ஹபீஸ் சயீத் அமைப்பிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சமீபத்தில், பாகிஸ்தானை வலியுறுத்தி இருந்தார்.

உத்தரவு : இதை தொடர்ந்து, ஹபீஸ் சயீத் அமைப்பிற்கு தடை விதித்து, பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு துறையினர் இதற்கான உத்தரவை
பிறப்பித்துள்ளனர். இதன் மூலம், அந்த அமைப்பின் வங்கி கணக்குகள் முடக்கப்படும்; சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.