Breaking News
இந்திய பெண்கள் அசத்தல் வெற்றி: பாகிஸ்தான் ஏமாற்றம்

பாகிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய பெண்கள் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்தில், பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. டெர்பி நகரில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இந்திய அணியில் ஷிகா பாண்டேவுக்கு பதிலாக மான்சி ஜோஷி தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் அணியில் பிஸ்மா மரூப், இம்தியாஸ் ஆகியோர் நீக்கப்பட்டு இராம் ஜாவெத், டயானா பெய்க் சேர்க்கப்பட்டனர். ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

இந்திய அணிக்கு மந்தனா (2) ஏமாற்றினார். பூணம் ராத் (47) அரைசத வாய்ப்பை இழந்தார். கேப்டன் மிதாலி ராஜ் (8) சொற்ப ரன்னில் அவுட்டானார். தீப்தி சர்மா (28), சுஷ்மா வர்மா (33) ஆறுதல் தந்தனர். கோஸ்வாமி (14) நிலைக்கவில்லை.

இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. ஜோஷி (4), பூணம் யாதவ் (6) அவுட்டாகாமல் இருந்தனர். பாகிஸ்தான் சார்பில் நாஷ்ரா சாந்து 4 விக்கெட் கைப்பற்றினார்.

பின் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 38.1 ஓவரில் 74 ரன்னுக்கு சுருண்டு, 95 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கேப்டன் சானா மிர் 29 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஏக்தா பிஷ்ட் 5 விக்கெட் கைப்பற்றினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.