Breaking News
ஆன்லைன் முறைகேடு; 3 நாளில் புகார் அளிக்க வேண்டும்

ஆன்லைன் முறைகேடுகள் மூலம் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியில் 3 நாட்களுக்கும் புகார் அளித்தால் அந்த பணம் 10 நாட்களுக்கும் அவர்கள் வங்கி கணக்கில் மீண்டும் செலுத்ப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய அரசு மின்னனு பரிவர்த்தனையை ஊக்கு வித்து வருகிறது. இதனால் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் ஆன்லைனில் முறைகேடுகளும் தவறுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது.

இவ்வாறான ஆன்லைன் முறைகேடுகளால் பணத்தை இழந்தவர்கள் தங்கள் பணத்தை மீண்டும் பெற கடும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது.

இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கிகளின் பங்களிப்பு பற்றாகுறை, அலட்சியம், சேவை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தால் அந்த பணத்திற்கு வங்கிகளே பொறுப்பு. அதே போல் 3 வது நபர் மூலம் அதாவது, மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் போதோ, இணையவர்த்தகம் செய்யும் போதோ ஏற்படும் தவறுகளால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தால், பணம் எடுக்கப்பட்ட 3 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட வங்கியில் தெரிவிக்கப்பட வேண்டும். அந்த பணம் 10 நாட்களுக்கும் உரிய வங்கி கணக்கில் மீண்டும் செலுத்ப்படும்.

அதே போல் பணம் எடுக்கப்பட்ட 4-7 நாள் வரை வங்கியில் புகார் செய்தால் ரூ 25,000 ( சேமிப்பு கணக்கிற்கு ரூ 10,000) வரை வாடிக்கையாளரே பொறுப்பேற்க வேண்டும். 7 நாட்களுக்கு பின் அளிக்கப்படும் புகார்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம்.

அதேபோல் 10 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்படும் தொகை இஸ்சூரன்ஸ் காரணம் காட்டி தாமதிக்க கூடாது. அதே நேரத்தில் மின்னனு பணபரித்தனை செய்யும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயம் செல்போன் எண், இமெயில் முகவரிகளை பெற்று அதன் மூலம் அறிவிப்புகளை அனுப்ப வேண்டும் ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.ஆன்லைன் முறைகேடுகள் மூலம் பணத்தை இழக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கியில் 3 நாட்களுக்கும் புகார் அளித்தால் அந்த பணம் 10 நாட்களுக்கும் அவர்கள் வங்கி கணக்கில் மீண்டும் செலுத்ப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மத்திய அரசு மின்னனு பரிவர்த்தனையை ஊக்கு வித்து வருகிறது. இதனால் ஆன்லைன் மூலம் பண பரிவர்த்தனையை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே போல் ஆன்லைனில் முறைகேடுகளும் தவறுகளும் அவ்வப்போது நடந்து வருகிறது. இவ்வாறான ஆன்லைன் முறைகேடுகளால் பணத்தை இழந்தவர்கள் தங்கள் பணத்தை மீண்டும் பெற கடும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் விதத்தில் ரிசர்வ் வங்கி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வங்கிகளின் பங்களிப்பு பற்றாகுறை, அலட்சியம், சேவை குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தால் அந்த பணத்திற்கு வங்கிகளே பொறுப்பு. அதே போல் 3 வது நபர் மூலம் அதாவது, மற்றவர்களுக்கு ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் போதோ, இணையவர்த்தகம் செய்யும் போதோ ஏற்படும் தவறுகளால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழந்தால், பணம் எடுக்கப்பட்ட 3 நாட்களுக்குள் சம்மந்தப்பட்ட வங்கியில் தெரிவிக்கப்பட வேண்டும். அந்த பணம் 10 நாட்களுக்கும் உரிய வங்கி கணக்கில் மீண்டும் செலுத்ப்படும். அதே போல் பணம் எடுக்கப்பட்ட 4-7 நாள் வரை வங்கியில் புகார் செய்தால் ரூ 25,000 ( சேமிப்பு கணக்கிற்கு ரூ 10,000) வரை வாடிக்கையாளரே பொறுப்பேற்க வேண்டும். 7 நாட்களுக்கு பின் அளிக்கப்படும் புகார்களுக்கு வாடிக்கையாளர்கள் எவ்வளவு பொறுப்பேற்க வேண்டும் என்பதை வங்கிகளே முடிவு செய்து கொள்ளலாம். அதேபோல் 10 நாட்களுக்குள் திருப்பி செலுத்தப்படும் தொகை இஸ்சூரன்ஸ் காரணம் காட்டி தாமதிக்க கூடாது. அதே நேரத்தில் மின்னனு பணபரித்தனை செய்யும் வாடிக்கையாளர்களிடம் கட்டாயம் செல்போன் எண், இமெயில் முகவரிகளை பெற்று அதன் மூலம் அறிவிப்புகளை அனுப்ப வேண்டும் ” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.