Breaking News
தினகரனுக்கு எம்.எல்.ஏ.,க்கள் மிரட்டல்

ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுடன், தினகரன், நேற்று அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து, ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, அமைச்சர் பதவி கேட்டு, அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மூவர், தினகரனுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

தினகரனுக்கு,எம்.எல்.ஏ.,க்கள்,மிரட்டல்

அ.தி.மு.க.,வில், ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வர் பழனிசாமி அணி, பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என, மூன்று அணிக ளாக, அ.தி.மு.க., – எம்.எல்.ஏ.,க்கள் செயல்படு கின்றனர். ஜனாதிபதி தேர்தலில், மூன்று அணி களும், பா.ஜ., வேட்பாளர் ராம்நாத் கோவிந்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர்.

ஜனாதிபதி தேர்தல், சட்டசபை தொடர் முடிந்த பின், மாவட்ட சுற்றுபயணம் சென்று, கட்சியை கைப்பற்ற, தினகரன் திட்டமிட்டுள்ளார். பெங்களூரு சிறையில், நேற்று முன்தினம், சசிகலாவை சந்தித்து, இதுபற்றி தினகரன் பேசியுள்ளார்.

தமிழக சட்டசபையில், முதல்வர் பழனிசாமி அரசு மீது நடந்த, நம்பிக்கை ஓட்டெடுப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், பன்னீர் அணி வழக்கு தொடர்ந்துள்ளது. அது வரும், 11ல் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கில் தாக்கல் செய்ய வேண்டிய ஆதாரங்கள் குறித்து, தன் ஆதரவாளர் களுடன், பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்திவருகிறார்.

இதில், மீண்டும் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தும் சூழ்நிலை உருவானாலோ அல்லது தி.மு.க., சார்பில், நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டாலோ, ஆட்சியை காப்பாற்றுவதற்கும், கவிழ்ப்பதற்கும் உள்ள துருப்புச் சீட்டு, தினகரன் கையில் உள்ளது.

இந்நிலையில், சென்னை, அடையாறில் உள்ள வீட்டில்,தினகரன் தீவிர ஆலோசனை நடத்தினார். நேற்று காலையில் நடந்த இந்த ஆலோசனையில், முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனி யப்பன், எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிவேல், தங்கதமிழ் செல்வன் உட்பட ஏழு பேர் பங்கேற்றனர். இந்த கூட்டம் காரணமாக, தினகரனை சந்திக்க வந்த கட்சியினரையும், நிர்வாகிகளையும், இரவு, 7:00 மணிக்கு மேல் வரும்படி திருப்பிஅனுப்பினர்.

ஆலோசனை குறித்து, தினகரன் ஆதரவு வட்டாரம் கூறியதாவது: இப்தார் விருந்து, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா கொண்டாட்டத்தில், தினகரனை பங்கேற்க விடாமல், முதல்வர் பழனிசாமி ஓரங்கட்டி விட்டார். ஜனாதிபதி தேர்தலில், தமிழகத்தில் ஆதரவு கேட்க வந்த,

பா.ஜ., வேட்பாளரும், தினகரனை சந்திக்கவில்லை. தினகரனின் ஆதரவு, எம்.எல்.ஏ.,க் களுக்கு, அமைச்சர் பதவி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும், முதல்வர் பழனி சாமி நிராகரித்து விட்டார்.இதனால், கடும் அதிருப்தி அடைந்த ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், அமைச்சர் பதவி கேட்டு, தினகரனுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று நடந்த ஆலோசனை யில், சட்டசபை கூட்டத்தொடர் முடிந்ததும், போக்குவரத்து, வருவாய், உயர் கல்வித்துறை அமைச்சர் பதவிகள் கேட்டு, போர்க்கொடி துாக்குவது குறித்து பேசப்பட்டு உள்ளது. அதை ஏற்க மறுத்தால், பழனிசாமி ஆட்சிக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுப்பது குறித்தும் பேசியுள்ளனர்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.