Breaking News
காஷ்மீர் நிலைமையை கண்காணித்து வருகிறோம்: மத்திய அரசு

பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு பின்னர் அமர்நாத் யாத்திரைக்கு யாத்ரீகர்கள் ஆர்வமுடன் சென்று வருகின்றனர். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என மத்திய அரசு கூறியுள்ளது.
காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை சென்ற யாத்ரீகர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 7 பேர் பலியானார்கள்;12 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் காஷ்மீர் சென்று சூழ்நிலையை ஆய்வு செய்தனர்.
பின்னர் மத்திய உள்துறை இணையமைச்சர் ஆஹிர் ஹன்ஸ்ராஜ் கூறுகையில், யாத்ரீகர்களுக்கு காஷ்மீர் மக்கள் உதவி செய்கின்றனர். மாநிலத்தில் அனைத்து உயர் அதிகாரிகளையும் சந்தித்தோம். தாக்குதலுக்கு பின் மாநில நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பிரச்னையை முதல்வர் மெகபூபா திறமையாக கையாண்டுள்ளார். தாக்குதலுக்கு பின் யாத்ரீகர்கள் யாரும் கலங்கவில்லை. ஆர்வத்துடன் தங்களது பயணத்தை தொடர்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்தர் சிங் கூறுகையில், பிரதமர் சார்பாக இங்கு உள்ளோம். போலீசாரின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கின்றன. யாத்திரைக்கு பாதுகாப்பை பலப்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாத்ரீகர்கள் பயப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 25 நாட்களாக பயங்கரவாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் காஷ்மீர் மக்களுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.